Yogi Babu And Ajith
நடிகர் யோகி பாபுவுக்கு அஜித் திருமண பரிசு கொடுத்துள்ளார். அது என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Thala Ajith Gift to Yogi Babu : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

தனுஷ் கர்ணன் படப்பிடிப்பில் யோகி பாபுக்கு தங்க சங்கிலியை திருமண பரிசாக கொடுத்திருந்த நிலையில் தல அஜித் வலிமை படத்தில் யோகி பாபுவுக்கு பரிந்துரை செய்து வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

அதுவும் வலிமையில் முக்கியமான வேடம் ஒன்றில் யோகி பாபு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வலிமையில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டே வெளியாகாமல் இருந்த நிலையில் யோகி பாபு நடிக்க இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை தொடர்ந்து யோகி பாபு மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.