எனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் - அதிரடியாக அறிக்கை விட்ட அஜித் | Thala Ajith Statement | HD

தல பெயரில் இருக்கும் மோசடி வேலைகள் குறித்து அஜித் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Thala Ajith Statement to Peoples : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

தல அஜித் எப்போதும் படங்களில் நடிப்பதோடு சரி வேறு எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அரசியல் சார்ந்த எந்த நிகழ்வு பற்றியும் கருத்து தெரிவிப்பதில்லை என்பதில் இன்று வரை உறுதியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே அஜித்தின் பிரதிநிதி என்ற பெயரில் சில தேவையற்ற வேலைகள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அஜித் தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் மூலமாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தல பெயரில் நடக்கும் மோசடி வேலைகள்.. அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை – முழு விவரம் இதோ.!!

அந்த அறிக்கையில் தனிநபர் ஆதாயத்திற்காகவும் அரசியல் கட்சிகளோ என்னுடைய பெயரை பயன்படுத்தக்கூடாது. என்னுடைய பிரதிநிதி சுரேஷ் சந்திரா மட்டுமே வேறு யாரும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Fan Made Valimai First Look Poster
Fan Made Valimai First Look Poster

மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி தொழில் ரீதியாகவோ அல்லது வர்த்தக ரீதியாகவோ யாராவது உங்களை அணுகினால் உடனடியாக சுரேஷ் சந்திரா அவர்களுக்கு தகவல் கொடுக்கவும். என்னுடைய பிரதிநிதி என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று வேலைகளுக்கு ஒருபோதும் நான் பொறுப்பாக மாட்டேன்.

அனைவரும் கவனமாக செயல்படுங்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.