Ajith & Me Too

Ajith & Me Too : மீ டூ குறித்து அஜித் விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசியதை பற்றி இப்படத்தில் நடித்துள்ள ஜாங்கிரி மதுமிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மீ டூ என்ற விவகாரம் பெரியதாக பேசப்பட்டு வருகிறது.

நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசத் தொடங்கியதால் பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலர் சிக்கி இருந்தனர்.

திரையுலக பிரபலங்கள் பலரும் மீ டூ குறித்து கருத்து தெரிவித்து வந்தனர், அஜித்தும் ஒரு முறை இது குறித்து பேசியுள்ளார்.

ஜாங்கிரி மதுமிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் அஜித்திடம் அதிகமாக சமயல் பற்றி தான் பேசுவேன். அவரும் சகஜமாக பேசுவார்.

அப்படி பேசி கொண்டிருந்த போது பாலிவுட்டில் மீ டூ என்ற ஒன்று உள்ளது. தமிழ் சினிமாவிலும் அது போன்று பேசத் தொடங்கினால் பாலியல் தொல்லைகள் குறையும் என கூறியுள்ளார்.

அஜித் கூறிய படியே தற்போது தமிழ் சினிமாவில் பலரும் மீ டூ குறித்து துணிந்து பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Madhumita