Thala Ajith Salary Detail : Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth
அஜித்துக்கு ரூ 100 கோடி சம்பளம், தொடர்ந்து மூன்று படம் என பரவிய தகவல்களுக்கு விளக்கமளித்துள்ளார் போனி கபூர்.

Thala Ajith Salary Detail : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த இரண்டு படத்தையும் போனி கபூர் அவர்களே தயாரிக்க இருப்பதாகவும் இந்த மூன்று படத்திற்கும் சேர்த்து அஜித்திற்கு ரூ 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை என போனி கபூர் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டீவீட்டில் தல அஜித்துடன் இன்னும் ஒரு ஆக்ஷன் படம் பண்ண உள்ளேன்.

அதன் பிறகு அவரை ஹிந்தி படம் பண்ண அழைத்தேன், ஆனால் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என கூறியுள்ளார். இதன் மூலம் அஜித்திற்கு 100 சம்பளம் என பரவியதும் வதந்தி தான் என்பது தெரிய வந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.