உடல் எடையை மேலும் குறைத்து ஸ்லிம் ஆக மாறி உள்ளார் அஜித்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கப்படும் என சொல்லப்படும் நிலையில் அஜித் இந்த படத்திற்காக தொடர்ந்து உடல் எடையை குறைத்துக் கொண்டே வருகிறார்.

இந்த நிலையில் அஜித் மேலும் உடல் எடையை குறைத்து இன்னும் கொஞ்சம் ஸ்லிம்மாக மாறி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது