Thala Ajith Movie : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.
போட்றா வெடிய.. தல ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டம் – வெளியானது தல 59 அப்டேட்.!
ஆரம்பத்தில் இப்படம் இந்தி படத்தின் அப்பட்டமான ரீமேக் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தமிழ் கதையில் பெருமளவில் மாற்றம் செய்திருக்கிறார்களாம்.
குறிப்பாக அஜித் – வித்யா பாலன் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரிவுபடுத்தி அவர்கள் வரும் நேரத்தையும் கூட்டியுள்ளார்களாம்.
இதனால் பிங்க் படத்தின் ரசிகர்கள் குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஒரு நல்ல படத்தை ஏன் மாற்ற வேண்டும் என்றும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.