Ajith History Movie
தல அ‌ஜித் அவர்கள் வாழ்க்கையை படமாக எடுக்க வாய்ப்பு கிடைத்தால் படத்தின் பெயர் என்ன என்று விஸ்வாச பட இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

தல அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்களை இயக்கியவர் இயக்குனர் சிவா. வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை இணைத்து பணியாற்றி உள்ளார்கள் அ‌ஜித் மற்றும் சிவா.

இ‌ந்த நிலை‌யி‌ல், இயக்குனர் சிவா அவர்கள் அடுத்ததாக சூரியாவை வைத்து படம் இயக்க இருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168-வது படம் இயக்க அழை‌ப்பு வந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார் சிவா.

ஒரு பேட்டியில், அ‌ஜித் அவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்திற்கு என்ன பெயர் வைப்பீர்க‌ள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “தன்னம்பிக்கை” என்று பெயர் வைப்பேன் என்று தெரிவித்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.