Ajith

பாடலாசிரியர் அருண் பாரதி தல அஜித்தின் கையெழுத்தை வெளியிட்டுள்ளார்.

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோ சங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக் என மிகப்பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடலாசிரியர் அருண் பாரதி அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

தல அஜித் அப்துல் கலாம் போன்றவர். எப்படி அப்துல் கலாமை பார்க்கும்போது நமக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குமோ அதே போல் தான் அஜித்தை பார்க்கும் போதும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்.

நடிகர்கள் என்றாலே படப்பிடிப்புகளில் பந்தாவாக தான் இருப்பார்கள் என கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் அஜித் அப்படி கிடையாது, படப்பிடிப்பு தளங்களில் தன்னுடன் உதவியாளர்களை கூட வைத்துக் கொள்ள மாட்டார். மிகவும் சாதாரண மனிதரைப் போலவே நடந்து கொள்வார்.

இதனால் எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும். நான் அவரிடம் ஆட்டோகிராப் கூட வாங்கி வைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

Ajith sign

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.