Thala Ajith Interview About Nayanthara
Thala Ajith Interview About Nayanthara

பில்லா படத்தில் நீச்சல் உடையில் நயன்தாராவை ரசித்தீர்களா என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நறுக்கென பதிலடி கொடுத்துள்ளார் தல அஜித்.

Thala Ajith Interview About Nayanthara : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்த திரைப்படம் பில்லா.

இந்த படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் நடித்து இருப்பார். அதேபோல் ஆரம்பம் படத்தின் ஈரம் சொட்டச் சொட்ட ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.

இதுகுறித்து அஜித் அளித்த பேட்டி ஒன்றில் நீச்சல் உடையில் நயன்தாராவை ரசித்தீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தனுஷ் மச்சானுக்கு அடித்த ஜாக்பாட்.. நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்யப் போகிறார் – வெளியான அதிரடி தகவல்கள்

கேள்வி கேட்ட தொகுப்பாளருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் அவருடைய வேலை இயக்குனர் சொல்கிறார் அவர் செய்கிறார் என நச்சுனு பதிலளித்துள்ளார்.

தல அஜித்தின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் இவர் தான் ரியல் ஜென்டில்மேன் என கொண்டாடி வருகின்றனர்.

அஜித் தனக்கு திருமணம் ஆனதிலிருந்து பெரும்பாலும் நடிகைகளுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதிலும் உறுதியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.