Valimai Villian
வலிமையில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க போவது யார் என்றே தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிரசன்னா வில்லனாக நடிப்பதாக தகவல் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என பிரசன்னா கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகவும் போனி கபூரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Sanjay Dutt

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.