Thala Ajith in Massive Look Photos

செம மிரட்டலான லுக்கில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thala Ajith in Massive Look Photos : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடித்து முடித்துக் கொடுத்த அஜித் தற்போது உலக சுற்றுலா சென்றுள்ளார்.

துளசி மாலை அணிவதால், ஏற்படும் பலன்கள்

பைக்கில் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று அழகழகான போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகின்றன. ‌ இதுவரை பல இடங்களிலிருந்து தல அஜித்தின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்த நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் Ranjith-கும் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல – விவாதமாக மாறிய பத்திரிகையாளர் சந்திப்பு

உயரமான இடம் ஒன்றில் தல அஜித் செம மாஸாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.