Thala Ajith in Lockdown Look
Thala Ajith in Lockdown Look

தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Thala Ajith in Lockdown Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அடேங்கப்பா யோகி பாபுவா இது.. பள்ளிப் பருவத்தில் எப்படி அழகா ஸ்லிம்மா இருந்து இருக்கார் பாருங்க? – முதல் முறையாக வெளியான புகைப்படம்

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 28 வருடங்கள் ஆகிவிட்டதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் அஜித் உடல் எடையை குறைத்து செம பிட்டாக மாறி உள்ளார். தற்போது இந்த போட்டோ தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்