வலிமை படத்தில் தல அஜித்தின் கெட்டப் குறித்து சூப்பரான தகவலை தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.

Thala Ajith Gettup in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தல அஜித் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வலிமை படத்தில் தல அஜித்தின் கெட்டப்.. இதுதான் முதல் முறையும் கூட - சூப்பர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை

எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா.

இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய போது வலிமை படம் பற்றி கேட்டதற்கு அஜித் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 10 முதல் 15 வயது வரை குறைந்த அஜித்தை இந்த படத்தில் பார்க்கலாம் என தெரிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.