Ajith Fun With Suriya

மேடையில் ஜோதிகா நடனம் ஆட அதை சூர்யாவிடம் சொல்லி சொல்லி கிண்டலடித்துள்ளார் தல அஜித்.

Thala Ajith Fun With Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் தனக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

படத்தில் நடிப்பதோடு சரி இந்த படத்தின் புரமோஷனுக்காக கூட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. இருப்பினும் அவரது படங்களுக்கு எப்போதும் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அஜித்தும் மற்ற நடிகர்களைப் போல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அப்படியான கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.

இதனை பார்த்த அஜித் சூர்யாவிடம் எதையோ சொல்லி சொல்லி கிண்டல் அடித்து சிரித்துக் கொண்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.