Thala Ajith

Thala Ajith Fans : ஜெர்மனியில் தல அஜித் சென்னை வந்ததும் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியதால் போலீசார் தடியடி நடித்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். நடிகர் என்பதையும் தாண்டி ஆராய்ச்சிகளிலும் ஆர்வம் கொண்டவர்.

சென்னையில் உள்ள MIT யூனிவர்சிட்டியில் விமான ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கு ஆலோசராக இருந்து வருகிறது.

இந்த ஆய்விற்காக சமீபத்தில் ஜெர்மன் சென்றிருந்தார். இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார் தல அஜித். அப்போது சென்னை விமான நிலையத்தில் அஜித்தை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் ஒன்று கூடியுள்ளனர்.

இதனால் போலீசார் வேறு வழியில்லாமல் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அஜித்தை பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அதிகாலையில் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துள்ள விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.