Valimai
மாஸ்டர் ட்ரெண்டிங்கிற்கு இடையில் மாஸ் காட்டியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி மாஸ் காட்டி வருகிறது.

ட்விட்டரில் கிட்டத்தட்ட பல ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வரும் நிலையில் அஜித் ரசிகர்களும் அவர்களின் பங்கிற்கு #வலிமைYear2020 என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.