Thala Ajith Fans Celebration
தல அஜித் ரசிகர்கள் அஜித் படத்தின் ஒவ்வொரு படத்தையும் ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள். அதே போல தல ரசிகர்கள் செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith Fans Celebration : தல 60 படத்தின் பூஜை முடிந்து படத்தின் டைட்டிலை வெளியிட்டது படக்குழு. இதை தொடர்ந்து தல ரசிகர்கள் ட்விட்டரில் #Valimai உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர்.

இன்டர்நெட்டில் செய்தது போல, போஸ்டர் அடித்து அசத்தி உள்ளார்கள் தல ரசிகர்கள். போஸ்ட்டரை ஒருவர் மற்றொருவரின் மீது ஏறி ஒட்டுகிறார்.

தல 60 படத்தின் டைட்டில் ரசிகர்கள் கருத்து – வீடியோ .!

அந்த போஸ்டரில் “வலிமையை நீங்க காட்டுங்க தல, விஸ்வாசத்தை நாங்க காட்றோம்” என்ற வசனம் போடப்பட்டு இருந்தது. அதற்கேற்ப அந்த ரசிகர்கள் செய்து உள்ளார்கள்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here