Thala Ajith Viswasam

Thala Ajith Viswasam : தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இரண்டாம் லுக் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் நெகட்டிவ் என இரண்டும் கலந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க டி.இம்மான் இசையமைத்து வருகிறார்.

நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, விவேக், ரமேஷ் திலக், கோவை சரளா என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் கடந்த வியாழக்கிழமை வெளியாகி இருந்தது.

இந்த போஸ்டரில் அஜித் புல்லட் பைக்கில் இரு கைகளையும் தூக்கியபடி போஸ் கொடுத்துள்ளார்.

பைக்கின் பின்னாடி இளைஞர்கள் பலர் துண்டை தலை மேல் சுற்றி கொண்டு ஓடி வருவது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன.

இதில் ஒரே இளைஞரின் புகைப்படத்தையே இரண்டு இடங்களில் கட் காபி பேஸ்ட் செய்துள்ளனர். இதை நெட்டிசன்கள் பலர் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

மேலும் விஜயின் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைபிடிப்பது போன்று இருந்ததால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இதனால் அந்த போஸ்டர் சமூக வளையதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டது.

அதே போல் விஸ்வாசம் செகண்ட் லுக் போஸ்டரில் தல அஜித் ஹெல்மெட் அணியாமல் இருந்து இருந்தால் அஜித்தை பார்த்து அவரது ரசிகர்களும் ஹெல்மெட் அணியாமல் கைகளை எடுத்து விட்டு வாகனம் ஓட்டுவார்கள் என சிலர் போர்க்கொடி தூக்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உண்மையில் அஜித்தின் இந்த போஸை தலைக்கவசம் தான் காப்பாற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here