Thala Ajith Effort to Valimai

வலிமை படத்திற்காக தல அஜித் வன்மக் கலையை பயின்று வருவதாக தகவல் வெளியாகி உளளது.

Thala Ajith Effort to Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட தல அஜித் பைக் ஸ்டன்ட் காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளாகி கையில் காயம் அடைந்ததாக தகவல் வெளியானது. அந்த காட்சி குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது படம் பற்றிய புதியதொரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது தல அஜித் இப்படத்திற்காக வன்மக் கலையை பயின்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

பொதுவாக போலீஸ் அதிகாரிகள் கைது செய்யும் கைதிகளை விசாரிக்கும் போது அடித்து விசாரிப்பது வழக்கம். ஆனாலும் கைதிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏதும் இருக்காது. உட்காயமாகத்தான் இருக்கும். வன்மக் கலையை பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகள் கைதியை விசாரிப்பதே காரணம் என கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்த படத்திற்காக தல அஜித் வர்மகலை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தல அஜித்தின் இந்த புதிய முயற்சியால் படம் படு மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.