Thala Ajith Decision

Thala Ajith Decision : கஜா புயல் பாதிப்பால் தல அஜித் விஸ்வாசம் ரிலீஸில் திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளார். இது தல ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலாக இருந்து வருகிறது.

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கி இருந்த சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.  இதுவரை 70 % தியேட்டர்களை விஸ்வாசம் படத்தின் ரிலீசுக்காக புக் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தல அஜித் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயல் தாக்கம் அதிகமாக இருந்து வருவதாலும் அந்த துயரத்தில் இருந்து மக்கள் இன்னும் மீண்டும் வராததாலும் ஒரு முடிவை எடுத்து படக்குழுவினருக்கும் கட் அண்ட் ரைட்டாக உத்தரவிட்டுள்ளார்.

ஆம், அது என்னவென்றால் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விஸ்வாசம் படத்திற்காக எந்தவொரு ப்ரோமோஷன் வேலைகளையும் மேற்கொள்ள கூடாது. போஸ்டர் கூட எங்கயும் தென்பட கூடாது.

துன்பத்தில் ஆழ்ந்துள்ள அந்த பகுதிகளில் விஸ்வாசம் ரிலீஸை கொண்டாடுவது சரியாக இருக்காது, அது தவறான விசியம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here