Sarkar & Ajith Fans

Sarkar & Ajith Fans : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்திற்காக தல ரசிகர்கள் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.

இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஓவர்சீஸ் நாடுகளில் இன்று முதல் படம் வெளியாக உள்ளது.

சர்கார் படத்திற்காக தளபதி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தல ரசிகர்களும் விஜயின் சர்கார் படம் வெற்றியடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டையை சேர்ந்த தல ரசிகர்கள் விஜயின் சர்கார் படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பேனர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்ட அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பகுதிகளை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சர்கார் படத்திற்காக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, சிம்பு, தனுஷ், விக்ரம் என மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் சர்கார் படத்திற்காக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sarkar Thala Fans Wishes

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.