Thala Ajith As Pilot
Thala Ajith As Pilot

Thala Ajith As Pilot : தல என்று தமிழ் சினிமாவில் பெருமையுடன் அழைக்கப்படும் அஜித், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்திருப்பதால் இவரது படம் தாறுமாறாக திரையரங்கில் ஓடுவது வழக்கம்.

இவருக்கு நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன், குட்டி ஏர் கிராஃப்ட் தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும்

இவர், ஏற்கெனவே மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தக்ஷா குழுவினருக்கு அஜித் வழிகாட்டிவருகிறார். அவர்களுடன் சேர்ந்து உருவாக்கிய ட்ரோன்கள் விருதுகளை வென்றுள்ளன.

இவர் தற்போது ஊரடங்கு காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவை கிருமி நாசி தெளிக்கவும், கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவிக்கவும் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா எத்தனை?? கெட்டவன் முதல் மகா மாநாடு வரை – சப்தமில்லாமல் ட்ராப்பான சிம்புவின் படங்கள்.!!

இந்த ஊரடங்கு நேரத்தில் அஜித் ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி ஏர்கிராப்ட்டை தரையிறக்கும் வீடியோ காட்சி தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், ரிமோட் மூலம் இயக்கப்படும் ஏர்கிராப்ட் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க சிறைப்பட்டிருக்கும் போது அதனை பத்திரமாக தல அஜித் தரையிறக்கி உள்ளார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.