Ajith Advise to Abhirami
பிக் பாஸ் அபிராமிக்கு தல அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதனை அபி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

எச் வினோத் இயக்கி இருந்த இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பிறகு தான் அபிராமி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் தல அஜித் அபியை அழைத்து எப்படி இருக்கு? உங்க மனநிலை என்ன என கேட்டுள்ளார்.

அதற்கு அபிராமி எல்லாரும் பாராட்டுறாங்க. பாலோயர்ஸ் எல்லாம் அதிகமாகி இருக்காங்க என கூற அஜித் கீழே இறங்கி வாங்க.. சினிமா ஒரே நாளில் எல்லாத்தையும் மாற்றும் என கூறியுள்ளார்.

அதே போல் இன்னொரு பேட்டியில் உங்களின் முதல் காதல் மற்றும் முதல் முத்தம் குறித்து சொல்லுங்க என கேட்டதற்கு தனக்கு 3 வருட காதல் இருந்ததாகவும் ஆனால் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார். முதல் முத்தம் 12 வகுப்பு விடுமுறையில் பள்ளி கிரஷ்ஷிற்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.