Thala Ajith Advice to Valimai Team
Thala Ajith Advice to Valimai Team

ஊரடங்கு உத்தரவு காரணமாக அஜித் வலிமை படக்குழுவிற்கு கொடுத்த அட்வைஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Thala Ajith Advice to Valimai Team : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் பாதித்து வருகிறது. இந்தியாவில் இதன் தாக்கம் கிடுகிடுவென உயர்ந்து பாதிப்பு 80 ஆயிரத்தை நெருங்கி விட்டது.

தமிழகத்திலும் இதன் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பரபரவென உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து துறைகளும் முடங்கின.

அஜித்துக்கு ரூ 100 கோடிக்கு மேல் வசூல் கொடுத்த படங்கள் என்னென்ன தெரியுமா? இதோ லிஸ்ட்!

முதல்வர் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறார். சினிமா படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் அஜித் தற்போதைக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கூட மேற்கொள்ள வேண்டாம். ஊழியர்கள் யாரும் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே படத்தின் வேலைகளைத் தொடங்கலாம் என கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு தல அஜித் குமார் முடிவெடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.