Thala 62
Thala 62

Thala 62 – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

அஜித்தின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள் – வைரலாகும் புகைப்படம்.!

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதற்கு அடுத்தபடியாக அஜித் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதுவும் தெரிந்த தகவல்தான். இதுபோக தற்போது அஜித்தின் 62-வது படத்தை இயக்குவது யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

வற்றாத நீர் ஊற்றாக விளங்கும் முருகப்பெருமான், எங்கு உள்ளார்? என்று தெரிந்து கொள்ளுங்கள்!

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் விக்ரம் வேதா எனும் பிளாக் பஸ்டர் படத்தைக் கொடுத்த புஷ்கர் – காயத்ரி கூட்டணிதான் அஜித்தின் 62-வது படத்தை இயக்க உள்ளார்களாம்.

இதுதொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் அவர்களே கூறியுள்ளனர்.