Thala 62 Movie Director Details

தல 62 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thala 62 Movie Director Details : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார்.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

இந்தப் படத்தைத் தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தியக போனிகபூர் தான் தயாரிக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்து யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Free-ஆ Ticket கொடுத்த கூட படத்துக்கு வராதீங்க! – Annaatthe Day 2 Public Review | Rajini, Nayanthara

இந்த நிலையில் தற்போது தல 62 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆரண்ய காண்டம் சூப்பர் டீலக்ஸ் விட திரைப்படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.