Thala 61
தல அஜித் வலிமை படத்தை தொடர்ந்து யாருடன் தயாரிப்பில் நடிப்பார் என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய தயாரிப்பில் நடிப்பார் என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் கடந்து சென்ற புத்தாண்டு தினத்தன்று வெற்றி படங்களை கொடுத்து வரும் இளம் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து வாழ்த்து கூறியதாகவும் அதன் பின்னர் உங்களுக்கு நான் கால்ஷீட் கொடுக்கிறேன் எனக்கு வாக்கு கொடுத்து விட்டு வந்திருப்பதாகவும் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் அந்த தயாரிப்பாளர் KJR ஸ்டூடியோஸ் ராஜேஷாக இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. காரணம் இவர்கள் தான் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை விநியோகிஸ்தம் செய்திருந்தனர் என்பதாக கூட இருக்கலாம்.

தல அஜித் இளம் தயாரிப்பாளருக்கு படம் கொடுப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.