Thala 61
எதிர்பாராத கூட்டணியுடன் தல அஜித்தின் அடுத்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு அஜித் யாருனுடன் கூட்டணி அமைப்பார்? தல 61 எப்படியான படமாக இருக்கும் என பல கேள்விகள் ரசிகர்கள் இடையே ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி அஜித்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்கலாம் எனவும் ஏ.எம் ரத்னம் தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் அஜித் நடித்த வேதாளம், என்னை அறிந்தால், ஆரம்பம் ஆகிய படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியை கொடுத்தன. இதனால் அஜித்தின் அடுத்த படத்தையும் அவர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ரத்தனத்திற்கு ஷங்கர் நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் ஒரு பிரம்மாண்ட கதையை உருவாக்குமாறு கூறியிருப்பதாகவும் அந்த கதை அஜித்திற்காக தான் இருக்கும் எனவும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித், ஷங்கர் கூட்டணி அமைந்தால் அது நிச்சயம் சூப்பரான கூட்டணியாக தான் இருக்கும். ஆனால் அமையுமா? அமையாதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.