Thala 61 Movie Director Update
Thala 61 Movie Director Update

அடுத்த பட இயக்குனருக்கு அஜித் டிக் அடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala 61 Movie Director Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். வலிமை படம் முடியும் வரை அடுத்த படங்களில் நடிக்க மாட்டேன் என போனி கபூருக்கு வாக்கு கொடுத்துள்ளார் அஜித்.

அதேசமயம் வலிமை படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிக்கலாம் என்ற யோசனையிலும் இருந்து வந்தார் தல அஜித்.

சூர்யாவுக்கு எதிரா பிரச்சனையை திசை திருப்பறாங்க – பாரதிராஜா ஆவேசம்..!

இந்த நிலையில் தற்போது தல அஜித் தன்னுடைய அடுத்த பட இயக்குனர் யார் என்பதை தேர்வு செய்து விட்டதாகவும் இன்னும் 15 நாளில் அது யார் என்பது தெரிய வரும் எனவும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சஸ்பென்ஸ் வைத்து பேசியுள்ளார்.

இதனால் அஜித்தை இயக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைத்துள்ளது? அடுத்த பட இயக்குநர் யாராக இருக்கும்? என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.