Thala 61
தல 61 படத்தின் இயக்குனர் நான் இல்லை என பரபரப்பு அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை சோகமாக்கியுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனரான எச். வினோத் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் தல அஜித்தின் அடுத்த படம் அதாவது தல 61 படத்தை கே. எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகின. இதனால் அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் அது உண்மையில்லை வெறும் வதந்தி தான், அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவது நான் இல்லை என விளக்கம் கொடுத்து ரசிகர்களை சோகமடைய செய்துள்ளார் இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.