Valimai With Zee Tamil
படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே வலிமை படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல டிவி சேனல் கைப்பற்றியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்திற்கு வலிமை என பெயரிட்டுள்ளனர்.

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தின் பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்புகள் நடக்க உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்டாடிலைட் உரிமையை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து டிவி சேனல் நிறுவனமும் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.