Thala 60

Thala 60 :

தல 59 படத்தை வினோத் இயக்க உள்ள நிலையில் தல 60 படத்தை பற்றிய தகவல்களும் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்ற விவரமும் தற்போது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தில் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியிட உள்ளனர். இது தற்போது அனைவர்க்கும் தெரிந்த தகவல்கள்.

இந்த படத்தை தொடர்ந்து உருவாக உள்ள அஜித்தின் அடுத்த படத்தை அதாவது தல 60 படத்தையும் போனி கபூர் அவர்களே தயாரிக்க உள்ளாராம்.

மேலும் இப்படத்தின் இயக்குனர் வினோத்தாகவே இருக்கலாம் அல்லது விஷ்ணு வரதனாகவோ சிறுத்தை சிவாவாகவோ இருக்கலாம் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன.

இந்த மூவரில் யார் அஜித்தை இயக்கினால் மாஸா இருக்கும் ரசிகர்களே?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.