THALA 60 UPDATE

Thala 60 Updates : தல 59 படம் தொடங்க உள்ள நிலையில் தல 60 படத்தை குறித்த அப்டேட்களை பேட்டி ஒன்றின் மூலமாக போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

தல 59 படத்தின் நாயகியின் கவர்ச்சி போட்டோஷூட் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

இந்த படத்தில் அஜித்துக்கு மனைவியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். மிக முக்கிய வேடத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

தல 59 படத்தை தொடர்ந்து தல 60 படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இதையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பதெல்லாம் நாம் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தல 60 குறித்த அப்டேட்களை வெளியிட்டுள்ளார்.

அதவாது தல 60 முழுக்க முழுக்க பிரெஷ் ஸ்கிரிப்ட், படு மாஸான பக்கா என்டர்டைனரான படமாக இருக்கும் என கூறியுள்ளார். இது தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ரஜினியின் அடுத்தடுத்த 4 படங்களின் இயக்குனர்கள் – ரகசியமாக முடிந்த பேச்சு வார்த்தைகள்.!

அதே சமயம் தல 60 நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இவர் ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் இயக்கத்தில் உருவான தீரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.