Ajith 60

Ajith 60 Update : தல 60 படம் குறித்த சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி எச். வினோத்துடன் கூட்டணி அமைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார்.

நேர் கொண்ட பார்வை குறித்து ஸ்ரீ தேவியின் மகள் ட்வீட் – என்ன சொல்றாங்கனு நீங்களே பாருங்க.!

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை அடுத்து தல அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைக்கலாம் என பேசப்பட்டு வந்தது.

அதே சமயம் அஜித்தின் அடுத்த படத்தையும் எச். வினோத்தே இயக்கலாம் எனவும் பேசப்பட்டு வந்தது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி எச். வினோத் தான் இயக்க உள்ளாராம். இதையும் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.

அஜித்தையும் இழுத்து போட்ட அரசியல் – இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.!

இது தான் தற்போது ஓரளவிற்கு உறுதியாகியுள்ள தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.