Thala 60

Thala 60 Update : தல 60 படம் குறித்து வெளியான தகவலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் ‘தல’, ‘தளபதி’யின் நாயகி.!

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வித்யா பாலன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை அடுத்து தல அஜித் மீண்டும் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு விளங்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடனே 5-வது முறையாக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தப்பான தளபதியின் கணக்கு, படக்குழு எடுத்த அதிரடி முடிவு – தளபதி 63-ன் அதிர்ச்சி அப்டேட்.

இது அஜித் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருந்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதில் விவேகம் திரைப்படம் மட்டும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.