Thala 60 to be shot in Middle east countries
Thala 60 to be shot in Middle east countries

இப்படத்தை புதாப்பஸ்ட், தென் ஆப்பிரிக்கா, மிடில் ஈஸ்ட் நாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.

Thala 60 to be shot in Middle east countries – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தளபதி 63 ஆடியோ உரிமையில் இப்படியொரு சாதனையா? மாஸ் காட்டும் தளபதி!

இப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லி இருந்தோம் ஆனால் அது மட்டும் இல்லையாம் இப்படத்தில் அஜித் பைக் ரேஸராகவும் நடிக்கிறார்.

அவருடைய நிஜ திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தில் நிறைய கார் சேஸிங் காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை புதாப்பஸ்ட், தென் ஆப்பிரிக்கா, மிடில் ஈஸ்ட் நாடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.