Thala 60 Movie

Thala 60 Movie : தல 60 படமும் ரீமேக் தான் அதுவும் எகிப்து மொழி படத்தின் ரீமேக் என தகவல்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தல 60 ஹீரோயின் யார் தெரியுமா? – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்கள்.!

போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தை அடுத்து உருவாக உள்ள தல 60 படமும் இதே கூட்டணியுடன் தான் உருவாக உள்ளது.

இந்நிலையில் தற்போது தல 60 படம் குறித்து ஒரு சிறிய தகவல் உலா வர தொடங்கியுள்ளது. தல 59 போல் தல 60-யும் ரிமேக் படம் தான் என கூறப்படுகிறது.

எகிப்து மொழியில் வெளியாகி செம ஹிட்டடித்த Hepta The Last Lecture என்ற படத்தின் ரீமேக் தான் எனவும் இது முழுக்க முழுக்க ஒரு காதல் படம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே போனி கபூர் அளித்திருந்த பேட்டியில் தல 60 படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் வைரலாகி வரும் இந்த தகவல் வெறும் வதந்தியாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.