Thala 60 Movie Villian Update : Movie Crew Latest Statement | Thala Ajith | Ajith Kumar | H Vinoth | Boney Kapoor | Ajith 60 Villain | Kollywood Cinema News
தல 60 வில்லன் அஜய் தேவ்கன் என பரவிய செய்திக்கு வழக்கம் அளித்துள்ளது படக்குழு.

Thala 60 Movie Villian Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு அவர் மீண்டும் எச். வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் நடிக்க உள்ளார்.

எச். வினோத் இயக்க உள்ள இந்த புதிய ஸ்கிரிப்ட்டில் வில்லனாக பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக தகவல் வைரலாக பரவியது.

கையைவிட்டுப்போன தளபதி-64 பட வாய்ப்பு! இருப்பினும் மகிழ்ச்சியில் ராஷ்மிகா…எதற்கு தெரியுமா?

இந்நிலையில் தற்போது இது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அஜய் தேவ்கன் போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் மைதான் என்ற படத்தில் நடித்து வருகிறார், அதை தவறாக அஜித் படத்தில் நடிக்கிறார் என தகவல்களை வைரலாக்கி விட்டார்கள்.

இந்த தகவலில் உண்மை இல்லை, அஜித்-வினோத் கூட்டணி என்பதை தவிர வேறு எதையும் உறுதி செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.