Thala 60 Movie Title Revealed..? - Here is The Massive Info.! | Thala Ajith | Ajith Kumar | H vinoth | Boney Kapoor | Kollywood Cinema News
தல அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் என்ற பெயரில் ஒரு தகவல் கசிந்துள்ளது.

Thala 60 Movie Title : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள நேர்கொண்ட பார்வை டைட்டிலுக்கு ஏற்றார் போலவே நேரடியாகவே அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

அஜித்திற்கு கிடைத்த மிக பெரிய கெளரவம்… அளவில்லா ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.!

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு அன்பு கட்டளை என டைட்டில் வைக்க படக்குழு ஆலோசித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் இது பைக் ரேஸ் சம்மந்தப்பட்ட படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படத்தில் இருந்து பிரபல நடிகை திடீர் விலகல் ஷாக்கிங் அப்டேட்.!

அன்பு கட்டளை என்ற டைட்டில் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இதுவரை வினோத் இயக்கிய படங்களின் டைட்டில் இது போன்று வித்தியாசமாகவே இருந்து வருவதால் இதுவும் உண்மையான டைட்டிலாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.