Valimai Heroine Update
தல 60 படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கலாம் என கூறப்பட்டு வந்தது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நடிகை ஒருவர் பெயரும் அடிபட்டு வந்தது.

இந்நிலையில் இதுவரை அடிபடாத நடிகையின் பெயர் ஒன்று அடிபட தொடங்கியுள்ளது. அதாவது யாமி கெளதம் இப்படத்தில் நாயகியாக கமிட்டாகி விட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

ஆனால் படக்குழு இதனை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.