Thala 59 Villian

Thala 59 Villian : தல 59 குறித்த தகவல்களும் வதந்திகளும் எக்கசக்கத்துக்கும் வைரலாகி வருகின்றன.

தல அஜித், வினோத், போனி கபூர் ஆகியோர் கதை விவாதங்களை முடித்து விட்டு ஆரம்ப கட்ட புரொடக்ஷன் வேலைகளை தொடங்க சொல்லி விட்டு கோவா ட்ரிப் சென்று விட்டார்.

இதனையடுத்து தற்போது பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பரபரப்படைய வைக்கின்றன.

இந்த படம் பிங்க் படத்தின் ரி-மேக்கா? இல்லையா? என தெரியாமல் ரசிகர்கள் ஒரு புறம் குழம்பி போய் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கோடம்பாக்க வட்டாரங்களில் மீண்டும் ஒரு தகவலை கிளப்பி விட்டுள்ளனர்.

ஆம், அது என்னவென்றால் இப்படத்தின் வில்லனாக நடிகர் கரண் தான் நடிக்க உள்ளாராம். அதற்கான பேச்சு வார்த்தைகளும் முடிந்து விட்டன என பேசி வருகின்றனர்.

ஆனால் எது உண்மை? இப்படத்தின் வில்லன் யார் என்பதெல்லாம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தல 59 படத்தின் வில்லனாக யார் நடிக்க வேண்டும்? உங்களுடைய கருத்துகள் என்ன ரசிகர்களே?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.