Ajith 59

Thala 59 Update : தல 59 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தை அடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

Pink படத்தின் ரீமேக் ஆக உருவாக உள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகையான வித்யாபாலன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Pink படத்தின் ரீமேக்தான் என்றாலும் தமிழ் சினிமா பாணியில் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தாற்போல போல மாஸாகவும் கிளாசாகவும் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.