Thala-60-Movie

Thala 60 to 62 : ஒரே நேரத்தில் தல அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல 60 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

அதன் பின்னர் தல 61 படத்தை அரசியல் கதைக்களத்துடன் எச்.வினோத் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் தல 62 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இது மங்காத்தா 2 படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெங்கட் பிரபுவும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அப்டேட் வெளியானாலே அஜித் ரசிகர்கள் அட்டகாசத்தை அடித்து கொள்ள முடியாது. தற்போது 3 படங்களின் அப்டேட் வெளியாகியுள்ளது. சும்மா விடுவார்களா? தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.