Thala 59 Title : தல 59 படத்தின் டைட்டில் குறித்த போஸ்டர் ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.
தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிங்க் படத்தின் ரி-மேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்க உள்ளார்.
வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
தற்போது இப்படத்தின் டைட்டில் அதிகாரம் என போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் தான்.
இருப்பினும் போஸ்டரில் தல அஜித் வக்கீல் வேடத்தில் இருக்க அவருக்கு கீழே படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள அதிகாரம் என்ற டைட்டிலின் எழுத்துகளில் வக்கீல் என்பதை குறிக்கும் சிம்பள், ஜெயில் கம்பி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இதனால் இப்போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.