தல 59 படத்தை பற்றிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தல அஜித். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர்.
இவர் தற்போது வீரம், வேதாளம்ம் விவேகம் என தொடர்ச்சியாக மூன்று படங்கள இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக், கோவை சரளா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை அடுத்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
பாலிவுட் சினிமாவில் வெளியாகி இருந்த பிங் படத்தின் ரீமேக்காக உருவாக இருப்பதாக கூறப்பட்டு வரும் இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் பிங் படத்தில் பாடல்களே இல்லை என்பது தான்.
இதனால் பிங்க் ரிமேக்கான இந்த படத்திலும் பாடல்கள் இருக்காது என கூறப்படுகிறது.
ஆனால் படக்குழுவினர் தல ரசிகர்களுக்காக படத்தில் மாற்றங்கள் செய்து பாடல்களை சேர்த்தாலும் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.