Thala 59

Thala 59 படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டி.இம்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது. அல்லது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை தல ரசிகர்கள் #Thala59 என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.