
தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் தாய் கிழவி பாடலின் முழு வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது. இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் இந்தியாவில் மட்டும் இன்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த இரு நாடுகளிலும் 2022 ஆம் ஆண்டில் வெளியான 3வது மிகப் பெரிய தமிழ் படமாக தனுஷின் திருச்சிற்றம்பலம் மாறியதோடு தல அஜித்தின் வலிமை திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று இருக்கும் “தாய் கிழவி” பாடலின் முழு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. முதலில் இப்பாடலை குறை சொன்னவர்கள் கூட இப்படம் வெளியான பிறகு இந்த பாடலை அவ்வப்போது ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தனுஷ் எழுதி அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த மாசான பாடல் இணையத்தில் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.