Thadam Movie Review

Thadam Review : மகிழ் திருமேனி இயக்கத்தில் ரேடான் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் விஜய், தன்யா ஹோப், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் தடம்.

படத்தின் கதைக்களம் :

அருண் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இருவரும் இரட்டையர்கள். எழில் மற்றும் கவின் என்ற பெயரில் இருவரும் நடித்துள்ளனர். இவர்களின் அம்மா அப்பா காதல் திருமணம் செய்து கொண்டு அதன் பின்னர் பிரிந்து விடுகின்றனர்.

எழில் தன் அப்பாவிடம் வளர்கிறான், கவின் அவரது அம்மாவிடம் வளர்கிறான். எழில் ஒரு IT நிறுவனத்தில் வேலை பார்த்து அதன் பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வருகிறார்.

அம்மாவிடம் வளர்ந்த கவின் யோகி பாபுவிடம் சேர்ந்து கொள்ளையடித்து ஊதாரியாக சுற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு போதும் ஒத்து போவதில்லை.

இப்படியே இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்க திடீரென கொலை நடக்கிறது. இந்த கொலையில் அருண் விஜய்க்கு சம்மந்தம் இருப்பது போலீசுக்கு தெரிய வருகிறது.

இரண்டு பேரையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதியில் இவர்களில் யார் குற்றவாளி? அதனை போலீஸ் கண்டு பிடித்ததா? இல்லையா? கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது தான் இப்படத்தின் மீதி கதைக்களம்.

அருண் விஜய் :

அருண் விஜய் முதல் முறையாக இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். மிகவும் திறமையாகவும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற நடிகர் நடிகைகள் :

அருண் விஜயை தவிர்த்து மற்ற நடிகர் நடிகைகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் அனைவருமே திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில் நுட்பம் :

இசை :

அருண் ராஜ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார். ஆனால் எந்தவொரு பாடலும் மனதில் இடம் பெறும் அளவில் அமையவில்லை.

ஒளிப்பதிவு :

கோபிநாத் என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அவருடைய பணியையும் சிறப்பாகவே செய்து கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

ஸ்ரீகாந்த் என்.பி என்பவர் இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்துள்ளார்.

இயக்கம் :

வித்தியாச வித்தியாசமான கதையுடன் படத்தை இயக்கி வரும் மகிழ் திருமேனி தடம் படத்தையும் வித்தியாசமான திரைக்கதையுடன் இயக்கியுள்ளார்.

பழைய கதையாக இருந்தாலும் படத்தை கொண்டு போன விதம் நன்றாக உள்ளது. இருப்பினும் படத்தின் வேகத்தை கொஞ்சம் கூட்டியிருக்கலாம்.

தம்ப்ஸ் அப் :

1. அருண் விஜயின் நடிப்பு
2. அறிவியல் சம்மந்தமான கருத்துக்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. கிளைமேக்ஸிற்கு பிறகான காட்சிகள் தேவையானதா?
2. யோகி பாபு இருந்தும் பெரிய அளவில் காமெடி இல்லாதது.
3. படத்தின் எந்த பாடல்களும் மனதில் நிற்கவில்லை

REVIEW OVERVIEW
தடம் எப்படி இருக்கு? - விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
thadam-reviewமொத்தத்தில் தடம் உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்ட படம். உலகில் இப்படியும் சில சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை உணர்த்தும் படம்.