Thaadi Balaji Request to Vijay

தயவுசெய்து அரசியல் பக்கம் வந்து விடாதீர்கள் என தளபதி விஜய்க்கு பிரபல நடிகர் கோரிக்கை வைத்துள்ளார்‌.

Thaadi Balaji Request to Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தளபதி விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இன்னொருபுறம் தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் முதல்வராக வேண்டும் என கூறி வருகின்றனர்.

இப்படியான நிலையில் தளபதி விஜயின் நண்பரும் நடிகருமான தாடி பாலாஜி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் நான் என்னுடைய ஆயுளில் பாதியை விஜய்க்கு தருகிறேன். அவர் இன்னும் நிறைய படங்களை நடித்து வெற்றி கொடுக்க வேண்டும். ஆனால் அரசியலுக்கு மட்டும் வராதீங்க. உங்க ரசிகர்கள் தான் உங்களுக்கு சட்டசபை. அவர்களுக்கு நீங்கள் எப்போதும் முதலமைச்சர் தான் என கூறியுள்ளார்.

தாடி பாலாஜியின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்டுகளில் சொல்லுங்க.