Terrorist Attack in Jammu and Kashmir
Terrorist Attack in Jammu and Kashmir

ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதும் இந்திய வீரர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது

Terrorist Attack in Jammu and Kashmir : ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் கிரீரி என்ற பகுதியில் திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார். இதனை அடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார்கள் திருப்பி தாக்கினர்.

இன்று அதிகாலை அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப்படை தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் பலியானவர்களில் இருவர் சிஆர்பிஎஃப் வீரர்கள் என்றும் ஒருவர் காஷ்மீர் மாநில போலீஸ் என்றும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி!!

இதையடுத்து அந்தப்பகுதியை சுற்றிவளைத்த சிஆர்பிஎப் படை வீரர்கள் மற்றும் போலீஸார் தப்பி ஓடிய தீவிரவாதியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 3 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடக்கும் 3-வது தாக்குதல் இதுவாகும். கடந்த 14-ம் தேதி ஸ்ரீநகரின் நவுகாம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.